போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற உத்தரவிடக் கூடாது-ஜெ. தீபா ஆவேசம்
போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற உத்தரவிடக் கூடாது என அதிமுக தீபா அணி பொதுச் செயலாளர் ஜெ. தீபா கூறியுள்ளார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இது குறித்து அதிமுக தீபா அணி பொதுச் செயலாளர் ஜெ. தீபா செய்தியார்களிடம் கூறியதாவது:
போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற உத்தரவிடக் கூடாது. முதலமைச்சர் போயஸ் கார்டனை நினைவிடமாக மாற்றுவதாக அறிவித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். நீதி விசாரணை வேண்டும் என்பது கபட நாடகம். சரியான விசாரணை நடக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு தலையிட்டு ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story