வங்கி கடன் பெற்றுத்தருவதாக மோசடி: பட்டதாரி வாலிபர்கள் 3 பேர் கைது
சென்னையில் வங்கி கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றுபவர் உசேன். பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவரிடம் வங்கி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.50 ஆயிரத்தை வடபழனி பஜனை கோவில் தெருவை சேர்ந்த கமல்ராஜ் என்கிற கார்த்திக் என்பவர் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து உசேன் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் மனோகரன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் மயிலாப்பூர் உதவி கமிஷனர் விசுவேஸ்வரய்யா, பட்டினப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்த கார்த்திக்கை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவருடைய மோசடி திட்டத்துக்கு உறுதுணையாக இருந்த அவருடைய நண்பர்கள் மணிகண்டன், கவியரசன் ஆகியோரும் போலீசார் பிடியில் சிக்கினார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் பட்டதாரி வாலிபர்கள் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
கார்த்திக் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு முறைகேடு புகார் காரணமாக வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தின் மூலம் இன்சூரன்ஸ் ஏஜென்சி நடத்தி பணம் சம்பாதிக்க கார்த்திக் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி அண்ணாசாலை மவுண்ட் சேம்பர், வாசன் அவென்யுவில் இன்சூரன்ஸ் ஏஜென்சி அலுவலகத்தை கார்த்திக் திறந்துள்ளார். அங்கு 2 பெண்களை பணிக்கு அமர்த்தி உள்ளார். அவர்களை செல்போனில் பேச வைத்து, கடன் வாங்கி தருவதாக பண மோசடியில் கார்த்திக் ஈடுபட்டுள்ளார். இதற்கு அவருடைய நண்பர்கள் மணிகண்டன், கவியரசன் உதவிகரமாக இருந்துள்ளனர்.
இவர்களுடைய மோசடியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் உதவி ஆசிரியர் ஒருவரும் ஏமாந்துவிட்டார். அவருடைய கிரெடிட் கார்டு மூலம் ரூ.82 ஆயிரம் திருடி உள்ளனர்.
அரசு போக்குவரத்துகழகத்தில் பணியாற்றும் கார்த்திகேயன் என்பவரும் இவர்களிடம் ரூ.30 ஆயிரத்தை பறிகொடுத்துள்ளார். இதேபோன்று எளிய முறையில் வங்கி கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கண்டவாறு போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 5 செல்போன்கள், ரூ.66 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story