சென்னையில் 1,300 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
சென்னையில் 1,300 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
சென்னை,
சென்னையில் 1,300 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலம் எந்த அசம்பாவிதமும் இன்றி அமைதியாக முடிந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் சென்னையில் ஏராளமான இடங்களில் விநாயகர் சிலைகள் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சென்னையில் நேற்று திருவல்லிக்கேணி, வள்ளுவர் கோட்டம், முத்துசாமி பாலம் ஆகிய 3 இடங்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றன. திருவல்லிக்கேணி திருவெட்டீசுவரர் கோவில் முன்பு தொடங்கிய ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன் தொடங்கி வைத்தார். இதில் பா.ஜ.க. எம்.பி. இல.கணேசன், தர்மபுரி பாப்பாரப்பட்டி ராமகிருஷ்ணா ஆசிரமம் ராமானந்தா மகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக ஐஸ்அவுஸ் நோக்கி செல்ல அனுமதி மறுத்து போலீசார் அவர்களை தடுத்தனர்.
இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சிலைகள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து பாரதி சாலை வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
இதேபோல் பல்வேறு இடங்களில் இருந்து மாட்டு வண்டிகள், டிராக்டர்கள், ஆட்டோக்கள், மினி வேன்கள், லாரிகள், தட்டு ரிக்ஷாக்கள் போன்ற வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பக்தர்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து, ஆடிப்பாடி ஆரவாரத்துடன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், எண்ணூர், பாலவாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் கடலில் கரைத்தனர்.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் ராட்சத கிரேன்கள் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க பயன்படுத்தப்பட்டன. வீடுகளில் பூஜிக்கப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை பொதுமக்களே கடற்கரைக்கு தூக்கிவந்து வழிபாடு நடத்தி கடலில் கரைத்தனர்.
சென்னை காசிமேட்டில் வடசென்னை வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு பகுதிகளில் இருந்து 88 சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
சென்னை நீலாங்கரை பாலவாக்கம் கடற்கரைகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மற்றும் பாலவாக்கத்தில் நவீன முறையில் டிராலிகள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை கரைக்கப்படுவதை பார்ப்பதற்காக மெரினா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி மேள தாளத்துடன் ஆடிப்பாடி ஊர்வலமாக கொண்டு வந்து பல்கலைநகர் பகுதியில் உள்ள கடலில் கரைக்கப்பட்டன.
எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடல் பகுதியில் திருவள்ளூர், செங்குன்றம், மாதவரம் பகுதிகளில் இருந்து 22 விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கரைத்தனர்.
ஊர்வலமாக வரப்படும் விநாயகர் சிலைகளால் போக்குவரத்து மிகவும் பாதிக்காதபடி, போக்குவரத்து போலீசார் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். ஊர்வலமாக வரும் ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பிற்காக சென்றார். அந்தவகையில் விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று எந்த வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக முடிந்தது.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்திற்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். மேலும் நகரின் முக்கிய சாலைகளின் வழியே விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டதையும், போலீசாரின் பாதுகாப்பு பணியையும் அவர் ஆய்வு செய்தார்.
சென்னையில் நேற்று நள்ளிரவு தாண்டியும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வந்தன. அந்தவகையில் நேற்று இரவு வரை 1,300 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story