‘புரியாத புதிர்’ திரைப்படத்தை வெளியிட தடை கோர்ட்டு உத்தரவு
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘புரியாத புதிர்’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து சென்னை சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு (பெப்சி) பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம். இவர், சென்னை உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் விஜய்சேதுபதி, நடிகை காயத்ரி சங்கர் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘புரியாத புதிர்’. இந்த திரைப்படத்தை தயாரிக்கும்போது ஒப்பனைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஓட்டுனர்கள் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் இரவு-பகலாக பணியாற்றியுள்ளனர்.
இதன்படி, தென்னிந்திய சினிமா மற்றும் டி.வி. சண்டை கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.2.17 லட்சமும், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு மேலாளர்கள் சங்கத்துக்கு ரூ.1.67 லட்சமும், கலை இயக்குனர்கள் சங்கத்துக்கு ரூ.4.28 லட்சம் உள்பட பல சங்கங்களுக்கு மொத்தம் ரூ.22 லட்சத்து 13 ஆயிரத்து 51 வழங்கவேண்டும்.
இந்த தொகையை படத்தை வெளியிடுவதற்கு முன்பு தந்துவிடுவதாக, அந்த படத்தை தயாரித்துள்ள ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெ.சதீஷ்குமார் கூறினார். ஆனால், தற்போது இந்த பாக்கி தொகையை தராமல், இந்த திரைப்படத்தை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளார்.
இந்த திரைப்படம் வெளியானால், வேலை செய்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால், ‘புரியாத புதிர்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சி.கார்த்திகா முன்பு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் இரா.சிவசங்கர், பாக்கி தொகையை தராமல் படத்தை வெளியிட அனுமதித்தால், ஏழை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று வாதிட்டார். தற்போது இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், வக்கீலின் வாதம் ஆகியவற்றின் அடிப்படையில், ‘புரியாத புதிர்’ படத்தை வருகிற 14-ந் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். இந்த வழக்கிற்கு எதிர்மனுதாரர் சதீஷ்குமார் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Related Tags :
Next Story