2-வது நாளாக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சென்னையில் 2-வது நாளாக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேரின் எதிர்ப்பால் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
40-கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், சில அமைச்சர்களும் போனில் பேசி வருவதாகவும் திவாகரன், தினகரன் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர். இதனால் தங்களிடம் உள்ள எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்து கொள்ளும் முயற்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.
இதற்காக மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசி வருகிறார். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தங்கள் மாவட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் கலந்து கொள்கிறார்கள்.
அதன்படி அமைச்சர்கள் தங்கள் மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுடன் நேற்று முதல்-அமைச்சரை அடையாறில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வருகின்றனர். நேற்று விழுப்புரம், கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்

சி.வி.சண்முகத்துடன் சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதால் அவருடன் செல்லாமல் சி.வி. சண்முகத்துடன் சென்றனர்.
திருச்சி மாவட்ட எம்.எல். ஏ.க்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருவண்ணாமலை மாவட்ட எம்.எல்.ஏ.க்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், நெல்லை மாவட்ட எம்.எல். ஏ.க்களை அமைச்சர் ராஜ லட்சுமி, அரியலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்களை கொறடா ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்ட எம்.எல்.ஏ.க்களை அமைச்சர் திண்டுக்கல் சீனி வாசன், நாகை மாவட்ட எம்.எல்.ஏ.க்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் அழைத்து வந்தனர்.
சென்னையில் 2-வது நாளாக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
நேற்றைய கூட்டத்தில் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனியில் தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை செய்வது, திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது போன்ற விவரங்களை எம்.எல்.ஏ.க்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது எம்.எல்.ஏ.க்களுக்கு பல்வேறு வாக்குறுதி களையும் அளித்தார். ஆட்சிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related Tags :
Next Story