மாணவி அனிதா தற்கொலை:நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
அனிதாவின் மரணத்தால் என் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அனிதா தற்கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
அனிதாவின் மரணத்தால் என் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. அனிதாவிற்கு நிகழ்ந்தது துரதிருஷ்டவசமானது. இந்த முடிவு அனிதாவின் உச்சகட்ட மனவேதனையை காட்டுகிறது. அனிதாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story