மாணவி அனிதாவின் தற்கொலை அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
மாணவி அனிதாவின் தற்கொலை அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை,
நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்திருந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அனிதாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மாணவி அனிதா மரணம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:–
மாணவி அனிதாவின் தற்கொலை அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது. மாணவர்கள் இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல், மனவலிமையோடு இருக்க வேண்டும். நீட்தேர்வில் விலக்கு பெற அரசு சட்டரீதியாக எடுத்த முடிவுக்கு, துணை நின்ற மாணவி அனிதா. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அரசு தொடர்ந்து முயற்சி செய்தது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்காக கடுமையாக ஒற்றை மாநிலமாக நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு டெல்லியில் முகாமிட்டு போராடினோம். மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. பிற மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் மனவலிமை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story