வட சென்னையில் தமிழக அரசின் சார்பில் பயிற்சி மையம் தொடங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவு


வட சென்னையில் தமிழக அரசின் சார்பில் பயிற்சி மையம் தொடங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவு
x
தினத்தந்தி 2 Sept 2017 11:41 AM IST (Updated: 2 Sept 2017 11:41 AM IST)
t-max-icont-min-icon

வட சென்னையில் தமிழக அரசின் சார்பில் பயிற்சி மையம் தொடங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில், மத்திய மாநில அரசுத் துறைகள் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையில் அரசின் சார்பில் பயிற்சி மையம் ஒன்று துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பயிற்சி மையம் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வட சென்னையில் இந்த ஆண்டு துவக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். இதற்கு அரசுக்கு நடப்பாண்டில் 1 கோடியே 53 இலட்சம் ரூபாயும், அதன் பின்னர் ஆண்டு தோறும் 1 கோடியே 25 இலட்சம் ரூபாயும் செலவு ஏற்படும்.

இப்பயிற்சி மையத்தில், போட்டித் தேர்வுகளை, திறமையாக எதிர்கொண்டு அவற்றில் தேர்ச்சி பெறும் வகையில், முறையான பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும், 500 மாணாக்கர்கள் என்ற வீதத்தில், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் இம்மாணாக்கர்களின் திறன் மேம்பட்டு வாழ்வாதாரம் சிறக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story