நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை: புதுச்சேரியில் டிடிவி தினகரன் பேட்டி
நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்று புதுச்சேரியில் அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியுள்ள 19 எம்.எல்.ஏக்களை டிடிவி தினகரன் இன்று புதுச்சேரி சென்று சந்தித்தார். தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது:- கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள். தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை யாரும் அடைத்து வைக்கவில்லை.
எங்கள் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்கள் போராளிகள். கட்சிக்கும் ஆட்சிக்கும் முதல் அமைச்சர் துரோகம் செய்கிறார். முதல்வரை மாற்றுவதற்காகவே எம்.எல்.ஏக்கள் ஒன்றாக உள்ளனர். சில எம்.எல்.ஏக்கள் சொந்த வேலையாக ஊருக்கு சென்று இருக்கின்றனர். அடுத்த கட்ட முடிவு குறித்து கலந்து பேசி முடிவு எடுக்க புதுச்சேரி வந்துள்ளேன். நீட் விவகாரத்தில் முதல்வரும் துணை முதல்வரும் தான் பதவி விலகவேண்டும். நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story