நதிகள் இணைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்தேன் தமிழிசை சௌந்தரராஜன்
நதிகள் இணைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்தேன் என தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசினார்.
முதல்-அமைச்சரை சந்தித்த பின் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியார்களிடம் கூறியதாவது:
நதிகள் இணைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்தேன். நீட் தேர்வு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக பிரச்சினை அல்ல, இந்தியாவின் பிரச்சினை. நீட் தேர்வை அரசியல் நோக்கோடு முன்னிறுத்தாமல் மாணவர்களுக்கு எடுத்து சொல்லி தற்கொலையை தடுப்பதே குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story