ஓணம் பண்டிகை: தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து
கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மலையாள மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஓணம் பண்டிகை என்பது செழிப்பான அறுவடையையும், பக்தி, வீரம், அன்பு மற்றும் பெருந்தன்மை மனது மிக்க மகாபலி அரசரையும் நினைவுகூரத்தக்க விழா ஆகும்.இந்த அறுவடை திருவிழா நம்மிடையே நிலவும் வேற்றுமைகளை, வித்தியாச எண்ணங்களை விட்டுவிட்டு, ஒருங்கிணைந்த பண்போடு செயல்பட வேண்டும் என்பதை நம்மிடையே நினைவூட்டுகிறது.
இந்த ஓணம் பண்டிகை நமது சகோதரத்துவ உணர்வு, தேசிய ஒருமைப்பாடு, கடின உழைப்பு ஆகியவற்றை பலப்படுத்துவதோடு, அதன்மூலம் நம் நாட்டை எல்லாவிதத்திலும் நல்ல முறையில் வழிநடத்தி செல்லும் விதமாக அமையட்டும்.எனவே இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பரந்து கிடக்கும் மலையாள சகோதர-சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story