தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுவை சொகுசு விடுதியில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுவை சொகுசு விடுதியில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னை,
அ.தி.மு.க.வில் எடப்பாடி- ஓ.பி.எஸ். அணிகள் இணைந்த பின்னர் மோதல் முற்றியது. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேருடன் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தினகரன் எதிர்ப்பு காட்டி வருகிறார். முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை எப்படியாவது நீக்கி விட வேண்டும் என்று தினகரனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
புதுவை சொகுசு விடுதியில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தங்கியுள்ள அவர்கள் அடுத்தக் கட்டமாக என்ன செய்யப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் அரசியல் விளையாட்டை மறந்து அங்குள்ள பூங்காவில் எம்.எல்-.ஏ.க்கள் சறுக்கு விளையாட தொடங்கினர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் ஆகியோருக்கு எதிராக பேட்டி அளித்துக் கொண்டே இருந்தனர்.
புதுவை விடுதியில் 19 பேர் வரை தங்கி இருந்த நிலையில், 10 பேர் வெளியேறி விட்டனர். நேற்று முன்தினம் சொகுசு விடுதிக்கு சென்று தினகரன் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார். அதன் பின்னரே விடுதியில் இருந்து கணிசமான எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினார்கள். தற்போது 9 எம்.எல். ஏ.க்கள் மட்டுமே விடுதியில் தங்கி உள்ளனர். இப்படி விடுதியில் இருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.க்களில் சிலர் எடப்பாடி பழனிசாமி அணியில் போய் சேரப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
ஆனால் தினரகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story