அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என தீர்மானம் மு.க. ஸ்டாலின்
மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுக்கள் பொறுப்பேற்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டு உள்ளது என மு.க. ஸ்டாலின் கூறிஉள்ளார்.
சென்னை,
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்காத மத்திய அரசுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து செப்டம்பர் 8-ம் தேதி திருச்சியில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கண்டனக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மத்திய மாநில அரசுக்கள் விழிப்படையும் வகையில் அடுத்தக்கட்ட போராட்டம் இருக்கும் என மு.க. ஸ்டாலின் கூறிஉள்ளார்.
அனிதாவின் மரணத்தை திசை திருப்பும் முயற்சியில் கிருஷ்ணசாமி ஈடுபட்டிருக்கிறார், கிருஷ்ணசாமி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார் மு.க. ஸ்டாலின்.
Related Tags :
Next Story