சமத்துவக்கோவில், நதிகள் இணைப்பு மது ஒழிப்புக்காக நடைபயணம் குமரி அனந்தன் அறிவிப்பு


சமத்துவக்கோவில், நதிகள் இணைப்பு மது ஒழிப்புக்காக நடைபயணம் குமரி அனந்தன் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2017 4:00 AM IST (Updated: 5 Sept 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

சமத்துவக்கோவில், நதிகள் இணைப்பு, மது ஒழிப்புக்காக நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,

சென்னை,

 காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கங்கை முதல் குமரி வரை நதிகளை இணைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தின் முன்பு 1986-ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்து அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியிடம் நதிகள் இணைப்புக்கு உறுதிமொழி பெற்றேன். தற்போது வரை நதிகள் இணைக் கப்படவில்லை. மது இல்லாத பாரதத்தை உருவாக்க விரும்பிய காந்தி மகானை பின்பற்றி மதுவை எதிர்த்து பலமுறை சிறை சென்றுள்ளேன். இதுவரை பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை.

மேட்டுக்குடியினர் வாழும் பகுதிக்கு செல்ல முடியாத வகையில் ஒடுக்கப்பட்டோர் வாழ வேண்டிய நிலையில் இருந்தபோது மேட்டுக்குடியில் பிறந்த தியாகி சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுமார் 6½ ஏக்கர் நிலம் வாங்கி அதற்கு பாரதபுரம் என்று பெயரிட்டார். அங்கு பாரத ஆசிரமம் அமைத்தார்.

அனைவரும் கோவில் கருவறை வரை சென்று பாரத மாதாவை வழிபட்டு செல்ல சமத்துவ பொதுக்கோவில் கட்ட அவர் எண்ணினார். இதற்கு 1923-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட போதும், தனது எண்ணம் நிறைவேறும் முன்பே சுப்பிரமணிய சிவா மறைந்தார்.

அவரது கனவு நனவாக வேண்டும் என்பதற்காகவும், மது ஒழிப்பு, நதிகள் இணைப்பை வலியுறுத்தியும் 1967-ம் ஆண்டு முதன்முறையாக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு நடை பயணம் மேற்கொண்டேன். இதன்பின்பு, இதே கோரிக்கைக்காக 14 முறை நடைபயணம் மேற்கொண்டுள்ளேன்.

எனது நடை பயணத்தின் பொன்விழா ஆண்டாக இந்த ஆண்டு அமைந்துள்ளதால் 15-வது நடைபயணத்தை அடுத்த மாதம்(அக்டோபர்) 2-ந் தேதி சென்னையில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு மேற்கொள்ள உள்ளேன். இதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story