நீட் தேர்வுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் போராட்ட அறிவிப்பு
அ.தி. மு.க. அம்மா அணி சார்பில் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்
சென்னை,
தினகரன் இன்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்து, மாநில அரசின் துணையோடு அதனை கட்டாயமாக மாணவர்கள் மீது திணித்திருப்பதால், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் பறிபோவதாக நம்மை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.
பள்ளிக் கல்வியை வெவ்வேறு பாடத்திட்டங்கள் வழியாக மாணவர்கள் பயின்று வரும் சூழ்நிலையில், சி.பி.எஸ்.இ. என்ற மத்திய அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மட்டும் பெரும் பயன் அடையும் வகையில் நீட் தேர்வுக்கான கேள்வித் தாள்கள் அமைந்துள்ளதால், மாநில அரசின் பாடத் திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் எவ்வளவு திறமையும், அறிவும் கொண்டிருந்தாலும் நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா பிளஸ்-2 பொதுத்தேர்வில் பல பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தாலும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கல்வி வாய்ப்பினை இழந்த அவலத்தையும், அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்ட துயரத்தையும் தமிழகம் கண்டு மனம் வெதும்பி நிற்கிறது.
மாநில அரசின் உரிமைகளைப் பறித்து, ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ உயர்கல்வி வாய்ப்புகளை தகர்க்கும் மத்திய அரசின் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகும் நிலையை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை இனியும் தொடரக் கூடாது.
தமிழ்ச் சமூகம் போராடிப் பெற்ற சமூக நீதி நிலை நாட்டப்பட வேண்டும். நம்முடைய இந்த உணர்வுகளை மத்திய அரசுக்குப் புரிய வைத்திடும் வகையில் அ.தி.மு.க. (அம்மா) மாணவர் அணியின் சார்பில் சென்னையில் 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் ஆட்சியர் அலுவலகம் அருகில், சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் மாபெரும் நீட் தேர்வு எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான அளவில் மாணவச் செல்வங்களும், தொண்டர்களும், சமூகநீதி வேட்கை கொண்ட தமிழர்களும், கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட பெற்றோர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு நம் உணர்வுகளை வெளிக்காட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story