ஆதரவு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுடன் நாளை மறுநாள் ஆளுநரை சந்திக்கிறார் டிடிவி தினகரன்
ஆதரவு எம்.எல்.ஏக்கள் எம்ம்பிக்களுடன் நாளை மறுநாள் ஆளுநரை சந்திக்க டிடிவி தினகரன் நேரம் கேட்டுள்ளார்.
சென்னை,
அதிமுகவில் பிளவு பட்ட இரு அணிகளும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல் அமைச்சரை மாற்றக்கோரி ஆளுநர் வித்யசாகர் ராவிடம் கடிதம் அளித்து இருந்தனர்.
இந்த கடிதம் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையையும் ஆளுநர் எடுக்காத நிலையில், நாளை மறுநாள் (செப்டம்பர் 7) டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுடன் ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். நாளை மறுநாள் 12.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க டிடிவி தினகரனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story