எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் கவர்னருக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 109 பேர் தான் கலந்து கொண்டதாக செய்திகள் வருகின்றன. நாங்கள் கவர்னரிடத்தில், குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும், எனவே உடனே சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தர விட வேண்டும் என்று சொன்னோம்.
அன்று நாங்கள் சொன்ன கருத்து மேலும் வலுப்பெறும் வகையில், இப்போது 109 பேர் தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது, உடனடியாக, நியாயமாக, நேர்மையாக, ஜனநாயக அடிப்படையில், சட்ட மன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கவர்னர் உத்தரவிட வேண்டும், என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.
இல்லையென்றால் குதிரை பேரம் இன்னும் பெரிய அளவில் நடைபெறும். அப்படிப்பட்ட சூழ்நிலையை கவர்னர் உருவாக்குகிறார் என்று சொன்னால், டெல்லியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தான் ரிங் மாஸ்டராக இருந்து கவர்னரையும், இந்த ஆட்சியையும் தங்களுடைய சொல்படி எல்லாம் ஆட்டுவிக்கிறார்கள் என்பது உண்மையாகி விடும்.
அதை தவிர்க்க வேண்டுமென்றால், கவர்னர் உடனடியாக சட்டசபையைக் கூட்டி, நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இதன் பிறகும் கவர்னர் உத்தரவிடவில்லை என்றால், நாங்கள் கூடிப் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
18-ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, நவம்பர் 17-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமையிலான அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். உள்ளாட்சி ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் ஐகோர்ட்டு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரை பேர அரசின் அடாவடிப் போக்கிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது.
சென்ற வருடம் 25-ந் தேதி, அவசர அவசரமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டு, 26-ந் தேதியே ஆளும் அ.தி.மு.க.வினர் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, மற்ற கட்சிகளுக்குத் தேர்தல் அறிவிக்கை 27-ந் தேதி கிடைக்கும் விதத்தில், ஒரு அராஜகமான தேர்தல் நடைமுறையை, ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஒருதலைப்பட்சமான தேர்தல் நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுத்தது.
அதனை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில், 04.10.2016 அன்று சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், 31.12.2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், அந்தத் தீர்ப்பை மதிக்காமல் மேல்முறையீடு செய்தது ஜனநாயக விரோத அ.தி.மு.க. அரசு. அதையும் நிராகரித்த சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், 14.5.2017-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மீண்டும் தீர்ப்பளித்தது.
ஆனாலும், ஐகோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல், குதிரை பேர அ.தி.மு.க. அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், தொடர்ந்து தாமதம் செய்து உள்கட்சி பிரச்சினைக்காக, உள்ளாட்சி ஜனநாயகத்தைப் படுகொலை செய்தது. இரட்டை இலை முடக்கப்பட்டதாலும், அ.தி.மு.க. என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வரவில்லை.
அ.தி.மு.க. அரசின் ஜனநாயக விரோதப்போக்கை எதிர்த்து ஐகோர்ட்டை தி.மு.க. மீண்டும் நாடியது. அரசு கூறிய காரணங்களை நிராகரித்து உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
வறட்சி, குடிநீர் பிரச்சினை போன்ற அனைத்திற்குமே உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகம் இருந்தால் தான் தீவிரமாக நடவடிக்கை எடுத்து, மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஏற்கனவே மாநிலத்தில் உள்ள குதிரை பேர அரசு நிலை தடுமாறி, அரசு நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்துள்ள இந்த நேரத்தில், உள்ளாட்சி அமைப்புகளாவது கிராமங்களிலும், நகரங்களிலும், மாநகரங்களிலும் மக்களுக்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
ஆகவே, வருகிற 18-ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். உள்ளாட்சி ஜனநாயகத்தை மேலும் முடக்கும் குதிரை பேர அரசின் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இடமளிக்காமல், ஐகோர்ட்டு தீர்ப்பிற்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story