நீட் முறைக்கு எதிர்ப்பு..! மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி


நீட் முறைக்கு எதிர்ப்பு..! மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி
x
தினத்தந்தி 6 Sept 2017 12:01 PM IST (Updated: 6 Sept 2017 12:00 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

வேலூர்,

வேலூரில் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் சேர தனியாக நுழைவுத் தேர்வு நடத்தபடும். அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நீட்தேர்வு முறை  அமல்படுத்தபட்டுள்ளது. நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு சி.எம்.சி. நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.எம்.சி. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ மணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இது தொடர்பாக  சி.எம்.சி. நிர்வாக அதிகாரிகள் கூறுகையில்:-

சுதந்திரத்துக்கு முன்பு ஆரம்பிக்கபட்ட சி.எம்.சி. மருத்துவ கல்லூரிக்கு தனி பாரம்பரியம் உள்ளது. அரசு உத்தரவுப்படி நீட் தேர்வை ஆதரிக்கிறோம். ஆனால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சி.எம்.சி. தனியாக நுழைவுத்தேர்வு நடத்தும். அதில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தபடும்.
அவர்களின் சமூக அக்கறை குழுவாக பணியாற்றும் பண்பு கிராமங்களில் சேவை செய்வது ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தபடும். நீட்தேர்வு அடிப்படையிலான நேரடி சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அக்டோபர் 11 ந் தேதி தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறோம்  என்றனர்.

100 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது. மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அரசு உடனடியாக தடையில்லா நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

Next Story