அரசை விமர்சிப்பதே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு வேலையாக உள்ளது - முதல்-அமைச்சர் பழனிசாமி


அரசை விமர்சிப்பதே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு வேலையாக உள்ளது -  முதல்-அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 6 Sept 2017 6:36 PM IST (Updated: 6 Sept 2017 6:36 PM IST)
t-max-icont-min-icon

அரசை விமர்சிப்பதே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு வேலையாக உள்ளது என முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

ஈரோடு,

ஈரோட்டில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில்  முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும், ஈரோட்டில் ஏரி, குளங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். ஈரோட்டில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்கள் கட்டப்படும்.  சிலர் தங்களது பேச்சால், அவர்களுக்கு வரும் ஆபத்தை உணராமல் பேசி வருகிறார்கள், அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அரசை விமர்சிப்பதே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு வேலையாக உள்ளது. சிலர் குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள், அது நிறைவேறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story