ஆதரவு எம்.பி.க்கள்-எம்.எல்.ஏ.க்கள் உடன் தினகரன் இன்று கவர்னரை சந்திக்கிறார்
டி.டி.வி.தினகரன், தனது ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடன் இன்று கவர்னரை சந்திக்கிறார்.
சென்னை,
டி.டி.வி.தினகரன், தனது ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடன் இன்று கவர்னரை சந்திக்கிறார். அப்போது, சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்துகிறார்.
சென்னை பெசன்ட்நகரில் உள்ள இல்லத்தில் டி.டி.வி.தினகரனை, அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், பழனியப்பன், செந்தில்பாலாஜி மற்றும் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, மத்திய-மாநில அரசுகள் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து சென்னையில் 9-ந்தேதி நடத்த உள்ள ஆர்ப்பாட்டம் குறித்தும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் 12-ந்தேதி அறிவித்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரனை நீக்கினால் அடுத்தகட்டமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
டி.டி.வி.தினகரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த சி.ஆர்.சரஸ்வதி நிருபர்களிடம் கூறியதாவது:-
எல்லோரையும் அரவணைத்து செல்லும் ஒருவரே முதல்-அமைச்சராக இருக்கவேண்டும். அந்த பண்பு எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. ஆகவே அவரை மாற்றவேண்டும் என்று கோரி டி.டி.வி.தினகரன் மற்றும் எங்களுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நாளை (இன்று) கவர்னரை சந்திக்கின்றனர்.
எங்களோடு இருக்கும் 9 எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள் என்று ஜெயக்குமார் கூறுவது உண்மைக்கு புறம்பானது. அவர்களின் பெயர்களை சொன்னால், அதுகுறித்து நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். எங்களோடு இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய ஆதரவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் கவர்னர் வித்யாசாகர் ராவை இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சந்திக்க உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்த 19 எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திப்பதற்கு டி.டி.வி.தினகரன் தரப்பினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் 10 பேருக்கு மட்டுமே கவர்னரை சந்திப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டி.டி.வி.தினகரன், எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பழனியப்பன் மற்றும் எம்.பி.க்கள் விஜிலா சத்தியானந்த், செங்குட்டுவன், உதயகுமார் உள்பட முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கவர்னரை சந்திப்பார்கள் என்று தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனுப்பிய கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து டி.டி.வி.தினகரன் கேட்டறிகிறார். மேலும் சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடுமாறும், ஜெயா டி.வி. குழும ஒளிபரப்புகள் பல்வேறு மாவட்டங்களில் இருட்டடிப்பு செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும், அவர் கவர்னரிடம் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

Related Tags :
Next Story