திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது -ஆர்.எஸ்.பாரதி


திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது -ஆர்.எஸ்.பாரதி
x
தினத்தந்தி 8 Sept 2017 5:37 PM IST (Updated: 8 Sept 2017 5:36 PM IST)
t-max-icont-min-icon

திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறிஉள்ளார்.

சென்னை,


நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக அரசு சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். போராட்டம் குறித்து தமிழக தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து திருச்சியில் திமுக நடத்த இருந்த கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்து உள்ளது. நீட் விவகாரத்தில் இன்று மாலை அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்திற்கு தி.மு.க. ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கூறிஉள்ளார். 

Next Story