நீட் எதிர்ப்பு பொது கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என மு.க. ஸ்டாலின் பேட்டி


நீட் எதிர்ப்பு பொது கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என மு.க. ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 8 Sept 2017 6:34 PM IST (Updated: 8 Sept 2017 6:34 PM IST)
t-max-icont-min-icon

நீட் எதிர்ப்பு பொது கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிஉள்ளார்.



திருச்சி,

மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று எதிர்க்கட்சிகள் தரப்பில் திருச்சியில் போராட்டம் நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக அரசு சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். போராட்டம் குறித்து தமிழக தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு சுப்ரீம் தடை விதித்ததை தொடர்ந்து திருச்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற இருந்த கண்டன பொதுக்கூட்டத்துக்கு  போலீஸ் அனுமதி மறுத்தது. 

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி மறுப்பை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிற கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், கோர்ட்டு பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கவில்லை, திட்டமிட்டப்படி கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், கூட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 

திருச்சியில் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

Next Story