சென்னையில், 200-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
சென்னையில், 200-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே சில உயிரிழப்புகள் நேர்ந்த நிலையில் தற்போது, சென்னையில் 700-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் தற்போது, 700-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்தபோது அதில் 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story