‘நீட்’ தேர்வை எதிர்த்து ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி மாணவர் அமைப்பினர் போராட்டம்
‘நீட்’ தேர்வை எதிர்த்து மாணவர் அமைப்பினர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் 11 அடுக்குகளுடன் 196 அடி உயரம் கொண்டது. இந்த கோபுரத்துக்கு அச்சுறுத்தல் இருந்ததால் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று காலை 9 மணி அளவில் அகில இந்திய மாணவர் பெருமன்றம் அமைப்பினர் 18 பேர் அருகில் உள்ள கட்டிடம் வழியாக கோபுரத்தில் ஏறினர்.
சுமார் 20 அடி உயரத்தில் ஏறி நின்று அனிதாவின் உருவபட பேனரை பிடித்தபடி ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர். இதைப்பார்த்த கோபுர பாதுகாப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கோபுர கதவின் வழியாக மேலே சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கீழே அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
* கோவையில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ரெயில் மறியலில் ஈடுபட்டனர். ரெயில் மறியலில் ஈடுபட்ட வக்கீல்களை போலீசார் கைது செய்தனர்.
* திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரியில், மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
* காட்பாடி ரெயில் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம் மற்றும் இந்திய குடியரசு கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
* சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* திருவொற்றியூர் அரசு தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் புதுவண்ணாரப்பேட்டை அரசு கலை கல்லூரி மாணவிகள் பேரணி சென்றனர்.
* கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று 5-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதனால் நாளை மறுதினம் முதல் 13-ந்தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story