‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்தை மீட்க அனைவரும் முன்வர வேண்டும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தியது போல, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்தை மீட்க அனைவரும் முன்வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும் பல்வேறு வகையானப் பாடத்திட்டங்கள் இருப்பதால் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது சமவாய்ப்புக் கொள்கைக்கு எதிரான முதல் துரோகமாகும்.
அடுத்ததாக கிராமப்புற ஏழை மாணவர்கள் ஒரே நேரத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கும், எந்த வசதியும் இல்லாமல் சொந்த முயற்சியில் ‘நீட்’ தேர்வுக்கும் தயாராகும்போது, வசதி படைத்த ஒரு தரப்பினர் மட்டும் 12-ம் வகுப்பை முடித்துவிட்டு, நீட்டுக்காக மட்டும் ஓராண்டு படித்து மருத்துவ இடங்களை கைப்பற்றிச் செல்வது எந்த வகையில் சமவாய்ப்பும், சமூகநீதியும் ஆகும்.
12-ம் வகுப்புத் தேர்வுக்கு ஓராண்டும், ‘நீட்’ தேர்வுக்கு இன்னொரு ஆண்டும் தயாராவது என்பது பணம் கொட்டிக் கிடக்கும் வசதி படைத்த குடும்பத்து மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாகும். அன்றாடம் வேலைக்கு சென்று அரை வயிற்றை நிறைக்கும் ஏழைக் குடும்பத்து மாணவர்களுக்கு இது சாத்தியமல்ல. இப்படியாக நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களின் வாய்ப்புகளை எல்லாம் பறித்து பணக்கார மாணவர்களுக்கு தாரை வார்ப்பதற்காகத் தான் ‘நீட்’ கொண்டு வரப்பட்டிருக்கிறது. சமூகநீதியை இதைவிட கொடூரமாக கொலை செய்யமுடியாது.
எனவே, ‘நீட்’ தேர்வை எப்பாடுபட்டாவது விரட்டியடிக்க வேண்டியது நமது கடமையாகும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எவ்வாறு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டதோ, அதேபோன்ற நெருக்கடியை இப்போதும் ஏற்படுத்தி ‘நீட்’ அநீதியில் இருந்து தமிழகத்தை மீட்க மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story