உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியா? முதல்-அமைச்சர் பதில்


உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியா? முதல்-அமைச்சர் பதில்
x
தினத்தந்தி 10 Sept 2017 4:30 AM IST (Updated: 10 Sept 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

காஞ்சீபுரம்,

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

வேலூரில் நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம் வழியாக சென்றார். காஞ்சீபுரத்தை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் பழனி, அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், அ.தி.மு.க. நிர்வாகி வடகால் ஆர்.சவரிங்கம் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

பின்னர் காஞ்சீபுரத்தை அடுத்த சேக்கான்குளத்தில் அ.தி.மு.க. கல்வெட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் நரிக்குறவர் திருமணத்தை தாலி எடுத்துக்கொடுத்து நடத்தி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வருகிற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என்று கேட்கிறீர்கள். இன்னும் தேர்தலே வரவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப் படும்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான வழக்கு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அதன் பின்னர்தான் முடிவு தெரியும். அ.தி.மு.க. ஆட்சி 134 எம்.எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியை அகற்றவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் நான் பொறுப்பேற்ற நாள் முதல் சொல்லி வருகிறார். இந்த ஆட்சி அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story