அறவழியில் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அறவழியில் 13-ந்தேதி நடைபெற இருக்கிற ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்றும், கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, வருகின்ற 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென திருச்சியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக மாவட்ட தலைநகரங்களில் நடத்திட அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்டச் செயலாளர்கள், அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து, இதற்கான தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்துவது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதை மனதில் வைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட செயலாளர்கள், அந்தந்த மாவட்ட காவல்துறையிடம் அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு முன் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட்டு, முறைப்படி அனுமதி பெற்று அமைதி வழியில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டும்.
தி.மு.க. எப்போதும் போல் சட்டத்தின் ஆட்சியை மதித்து, ஜனநாயக ரீதியில் நடைபோடும் இயக்கம். ஆகவே, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி அறவழியில் இந்த ஆர்பாட்டத்தை நடத்தி, தமிழக மக்களின், குறிப்பாக மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையையும், சமூகநீதியையும், மாநில உரிமையையும் வென்றெடுக்க, நிர்வாகிகளும், தொண்டர்களும், அனைத்துக் கட்சியினருடன் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வு முறையை கண்டித்து கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, திருச்சி விஸ்வநாதம் அரசு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
தி.மு.க. சார்பில் எடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் குறித்து அவர் மாணவர்களிடம் விளக்கி கூறினார். மேலும் போராட்டத்தை மாணவர்கள் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, மு.க.ஸ்டாலின் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, கல்லூரி மாணவர்கள் ஏறக்குறைய ஒரு வாரமாக தங்களது உடலை வருத்திக் கொண்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உணர்வை எண்ணிப் பார்த்து, மத்திய-மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஆனால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கி, உரிமைக்காகப் போராடும் மாணவர்களை கொடுமைப்படுத்துவது, அச்சுறுத்துவது, அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பது உள்ளபடியே கண்டிக்கத்தக்கது. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story