ரெயில்வே ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒதுக்கீடு தமிழக அரசு அறிவிப்பு


ரெயில்வே ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒதுக்கீடு தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Sept 2017 2:45 AM IST (Updated: 10 Sept 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பதவியையும் தமிழக அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை,

தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெயில்வே ஐ.ஜி.யாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், நிலுவையில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. ஆர்.தமிழ்ச்சந்திரன், திருச்சி ஆயுதப்படை ஐ.ஜி.யாக பணி இடமாற்றம் செய்யப்படுகிறார்.ரெயில்வே ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி.யாக கூடுதல் பொறுப்பையும் வகிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story