கவர்னருடன் இன்று சந்திப்பு:அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற எந்த தியாகத்துக்கும் தயார் மு.க.ஸ்டாலின் பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற எந்த தியாகத்துக்கும் தயாராக உள்ளோம் என்று ஒரத்தநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தஞ்சாவூர்,
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி கவர்னரை இன்று சந்திக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற எந்த தியாகத்துக்கும் தயாராக உள்ளோம் என்று ஒரத்தநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா, சட்டசபை பணியில் வைரவிழா, முரசொலி பவளவிழா மற்றும் எல்.கணேசன் எழுதிய நூல் வெளியீட்டு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-
இன்றைக்கு சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்து நெருங்கிக்கொண்டு இருக்கிறது. நானும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் தான் என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு தொடர்ந்து அவர் அநீதி இழைத்துக்கொண்டு இருக்கிறார்.
மருத்துவபடிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்று சட்டம் கொண்டுவந்துள்ளனர். கிராமப்புற மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை எதிர்த்து எல்லா கட்சிகளும் போராடி வருகிறது. நீட் தேர்வுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும்.
பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை பெற்று ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும், ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம், மீனவர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்துவைப்போம், விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்போம் என்றனர். ஆனால் எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
நீட் பிரச்சினைக்கு ஓராண்டு விலக்கு அளிப்போம் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். அது என்ன ஆனது. மருத்துவ படிப்புக்கு அடுத்ததாக என்ஜினீயரிங் படிப்பு, கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்பவும் நீட் தேர்வு கொண்டு வரக்கூடியநிலை வரும். மருத்துவராக, என்ஜினீயர்களாக, நீதிபதிகளாக ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக பா.ஜ.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதை வேடிக்கை பார்க்கும் ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது.
ஜெயலலிதா ஜனநாயக படுகொலையை செய்யக்கூடியவராக இருந்தாலும், அவர் உயிரோடு இருக்கும்வரை நீட் தேர்வுக்கு தடை இருந்தது. தி.மு.க. ஆட்சி இருந்தவரை தமிழகத்தில் நீட் தலைகாட்ட முடியவில்லை. ஆனால் இப்போது குதிரைபேர ஆட்சி நடக்கிறது.
எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அடிபணிந்து, தன்மானம், சுயமரியாதையை இழந்து தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்துவிட்டார். அதனால் தான் சமூக நீதிக்கு அநீதி இழைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. நமக்கு ஒவ்வாத திட்டங்களை எதிர்க்கக்கூடிய உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அதுபோல தான் நீட் தேர்வை எதிர்த்து போராடி வருகிறோம். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
ஆளுங்கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள் இந்த ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். நானும், தி.மு.க. கூட்டணி கட்சியினரும் இதே கருத்தை வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளோம்.
எனது தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இன்று கவர்னரை சந்திக்க உள்ளோம். அப்போது இந்த ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். அதன்பின்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி இந்த ஆட்சியை அகற்ற எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அல்ல. எங்கே சென்றாலும் இந்த ஆட்சி எப்போது கவிழும், தமிழகத்திற்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தான் கேட்கிறார்கள். தமிழக மக்களை காக்க, தமிழகத்தில் நடைபெறும் குதிரைபேர ஆட்சியை அகற்ற அனைவரும் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story