மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாததால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய உள்கட்டமைப்பு குறைபாடுகளை புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி நிவர்த்தி செய்யாததால் அந்த கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்த மாணவர்களின் பெயர்களை பதிவு செய்ய தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மறுத்து விட்டது.
இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மருத்துவ படிப்பை முடித்த மாணவர்களின் பெயரை பதிவு செய்ய தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, இந்திய மருத்துவ கவுன்சில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் நூட்டி ராமமோகன்ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் விசாரித்தனர். முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
அரசு வேலை வாய்ப்புக்கும், மேற்படிப்புக்கும் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது முக்கியம். அந்த அடிப்படையில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி நிர்வாகம் நிவர்த்தி செய்யாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்த மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், மேற்படிப்பை முடித்த மாணவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் இழப்பீடாக கல்லூரி நிர்வாகம் வழங்க வேண்டும்.
இந்த தொகையை மாநில மருத்துவ கல்வி இயக்குனர் வசூலித்து மருத்துவ மாணவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் இருந்து 10 ஆயிரம் ரூபாயும், மேற்படிப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் இருந்து 25 ஆயிரம் ரூபாயும் பிடித்தம் செய்து மருத்துவ கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிக்காக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story