அ.தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுகிறது சசிகலாவை நீக்க தீர்மானம் நிறைவேற்றம்?
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.
சென்னை,
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 2,300 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் கடந்த மாதம் 21-ந் தேதி இணைந்தது. இதனால், கட்சியில் நிலவிவந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டதாக தொண்டர்கள் கருதிய நேரத்தில், டி.டி.வி.தினகரன் அணியால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
இந்த அசாதாரண சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.35 மணியளவில், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 2,300 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், 750 செயற்குழு உறுப்பினர்களும் அடங்குவார்கள்.
பொதுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி தீவிரம் காட்டிவருகிறது. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழ் கிடைத்து விட்டதா?, அந்த அழைப்பிதழுடன் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று அழைப்பு விடுத்து வருகின்றனர்.
பொதுக்குழு கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் செய்யப்பட்டுள்ளது. முதலில், காலை 10.35 மணிக்கு அங்குள்ள சிறிய அரங்கத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் முடிந்ததும், அருகில் உள்ள பெரிய அரங்கத்தில் பொதுக்குழு கூட்டம் தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொள்கிறார்கள்.
பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. ஏற்கனவே, கட்சியை வழிநடத்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தப் பொதுக்குழுவில் அவர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது.
மேலும், சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் கட்சியை விட்டு நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அவ்வாறு தீர்மானம் கொண்டுவரப்படும்போது, உறுப்பினர்கள் மத்தியில் எதிர்ப்பு எதுவும் கிளம்பினால் அதை சமாளிக்கவும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. எனவே, நாளை கூடும் பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.
இதற்கிடையே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் கூட்டும் பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
எனவே, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா?, அல்லது தடை கேட்ட மனு தள்ளுபடி ஆகுமா? என்பது இன்று தெரிந்துவிடும்.

Related Tags :
Next Story