சசிகலா நியமனம் ரத்து, தஞ்சையில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து தஞ்சையில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தஞ்சை,
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடியது.
பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது. அ.தி.மு.கவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஆனால் டிடிவி தினகரன், கட்சியின் பொது செயலாளர்தான் பொதுக் குழுவை கூட்ட முடியும். அவ்வாறு இல்லை என்றால் துணை பொதுச் செயாலாளர் நான்தான் பொதுக் குழுவை கூட்ட முடியும். இது இரண்டும் இல்லாத இந்த பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றார். மேலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தொடங்கிவிட்டேன் என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார். சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் அவருடைய ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story