சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது திவாகரன் பேட்டி
சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என திவாகரன் கூறிஉள்ளார்.
மன்னார்குடி,
சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது. அ.தி.மு.கவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என டிடிவி தினகரன் கூறிஉள்ளார்.
இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசுகையில் சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என கூறிஉள்ளார்.
சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை, தற்போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது. தினகரன் தலைமையில் நடத்தப்படும் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது என கூறிஉள்ளார் திவாகரன்.
ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இல்லாத அமைச்சரவை வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாகும், தமிழகத்தில் அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது என கூறிய திவாகரன் சசிகலாவின் அனுமதி பெற்று உண்மையான பொதுக்குழுவை கூட்ட இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story