சி.பா.ஆதித்தனார் சிலையை அதே இடத்தில் மீண்டும் நிறுவ வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


சி.பா.ஆதித்தனார் சிலையை அதே இடத்தில் மீண்டும் நிறுவ வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Sept 2017 3:30 AM IST (Updated: 13 Sept 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

சி.பா.ஆதித்தனார் சிலையை அதே இடத்தில் மீண்டும் நிறுவ வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலையை அகற்றியுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக சட்டப்பேரவை தலைவராக பணியாற்றிய அவரது பொன் விழா ஆண்டில், அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவையை அவமதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. உடனடியாக சி.பா.ஆதித்தனார் சிலையை அங்கே மீண்டும் நிறுவ வேண்டும். தமிழுணர்வுடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சி.பா.ஆதித்தனார் சிலையை அதே இடத்தில் மீண்டும் திறக்க வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமிக்கு, தமிழ்நாடு தியாகிகள் கழகத்தின் தலைவரும், சமூக சேவகருமான தக்கலை சந்திரன் கடிதம் அனுப்பி உள்ளார்.

காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு எஸ்.சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகில் வாழும் கோடிக்கணக் கான தமிழர்களின் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் சி.பா.ஆதித்தனாரின் முழு உருவ சிலையை எம்.ஜி.ஆர். நிறுவி புகழ் சேர்த்தார். வருகிற 27-ந் தேதி சி.பா.ஆதித்தனாரின் நினைவுநாளையொட்டி, அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்த வருவோர் ஏமாந்துவிடக்கூடாது என்பதால், அந்நாளுக்கு முன்பாக அவரது சிலையை அதே இடத்தில் அரசு நிறுவ வேண்டும்’ என்றார். 

Next Story