எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க போலீசார் எம்.எல்.ஏக்களை மிரட்டுகின்றனர்-டிடிவி தினகரன்


எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க போலீசார் எம்.எல்.ஏக்களை மிரட்டுகின்றனர்-டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 13 Sept 2017 2:21 PM IST (Updated: 13 Sept 2017 2:21 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என காவல்துறையினர் எம்.எல்.ஏக்களை மிரட்டுகின்றனர் என டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை

டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக காவல்துறையின் மிரட்டல் தொடர்பாக, கர்நாடக காவல்துறையிடம் புகார் அளிப்போம். குடகு விடுதியில் உள்ள எம்எல்ஏக்களை, தமிழக காவல்துறையை கொண்டு மிரட்டுகிறார்கள்.

என் மீதும், நடிகர் செந்தில் மீதும் திருச்சியில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என காவல்துறையினர் எம்.எல்.ஏக்களை மிரட்டுகின்றனர். அவர்கள் மீது வழக்கு தொடருவோம் என மிரட்டுகிறார்கள்.

அவர்கள் கூட்டியது பொதுக்குழு அல்ல. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அவர்கள் கூட்டி பொதுக்குழு செல்லுமா செல்லாதா என தெரியவரும்.  நம்பிக்கை ஓட்டெடுப்பு கொண்டு வரும் போது சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள்.

பழனியப்பன் எம்எல்ஏவை போலீசார் கைது செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்  நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிகிறது. கட்சியை காப்பாற்ற நான் எந்த முடிவும் எடுக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story