திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் அரசியல் பேசவில்லை, நட்பு ரீதியாகவே சந்தித்தேன்- எச் ராஜா
திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் அரசியல் பேசவில்லை, நட்பு ரீதியாகவே சந்தித்தேன் என பா.ஜனதா தேசிய செயலாளர் எச் ராஜா கூறினார்.
சென்னை,
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வருகிற 27-ந்தேதி நடைபெறும் தனது மணிவிழாவுக்கு மு.க.ஸ்டாலினை அழைப்பதற்காக எச்.ராஜா இன்று மதியம் 12.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார்.
அறிவாலயத்துக்கு சென்ற எச்.ராஜாவை மு.க.ஸ்டா லின் வரவேற்றார். பின்னர் அறிவாலயத்துக்குள் சென்ற எச்.ராஜா மணி விழா அழைப்பிதழை கொடுத்து அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார்.
பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இந்த சந்திப்பு குறித்து எச்.ராஜாவிடம் கேட்டபோது இது முழுக்க, முழுக்க எனது மணிவிழா சம்பந்தப்பட்டது. எனது மணிவிழாவுக்கு அனைத்து தலைவர்களையும் அழைத்து வருகிறேன்.அதன்படி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மணிவிழா வுக்கு அழைத்தேன். இம்மி அளவு கூட அரசியல் பற்றி பேசவில்லை என கூறினார்.

Related Tags :
Next Story