ஜெ.தீபா மீண்டும் கணவனுடன் இணைந்தார்; எடப்பாடி பழனிசாமி அரசு நீடிப்பது தவறு என பாய்ச்சல்
ஜெ.தீபா மீண்டும் கணவனுடன் இணைந்தார் எடப்பாடி பழனிசாமி அரசு நீடிப்பது தவறு என கூறி உள்ளார்.
சென்னை,
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபாவும், அவரது கணவர் மாதவனும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்ந்தனர். தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டைவிட்டு வெளியேறிய மாதவன் வெளியில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் தீபா, கணவர் மாதவன் இடையே இருந்து வந்த கருத்து

வேறுபாடு நீங்கியது. அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தனர். இதையடுத்து இருவரும் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தனர். அங்கு இருவரும் ஒன்றாக ஜெயலலிதா சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் என்பது வேறு, குடும்பம் என்பது வேறு. எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இந்த அரசு நீடிப்பது தவறு. இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும்.
நீட் தேர்வை பொறுத்த வரையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தான் பெரும்பாலானோர் மருத்துவ படிப்பு படிக்க தேர்வாகி உள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் படித்த ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததே காரணம். அரசு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவி அனிதாவின் மரணம் நிகழ்ந்திருக்காது.
அ.தி.மு.க.வை நோக்கித்தான் பயணம் எப்போதும் இருக்கும். அ.தி.மு.க.வுக்கு என்றுமே தலைமை நான்தான். என்னை பொறுத்தவரை எப்போதுமே துரோக கும்பல் அ.தி.மு.க.வுக்குள் வந்து விடக் கூடாது. இவ்வாறு அவர் கூறி னார்.
பின்னர் தீபாவும், கணவர் மாதவனும் தி.நகரில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். 6 மாதம் கழித்து மாதவன் தீபாவின் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

Related Tags :
Next Story