என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு


என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
x
தினத்தந்தி 17 Sept 2017 3:27 AM IST (Updated: 17 Sept 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அந்த நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது. பா.ம.க. முயற்சியால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலம் கொடுத்தவர்களுக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க ஆணையிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

நெய்வேலியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் தந்த நிலங்களை முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம் இப்போது அதன் உண்மையான பங்குதாரர்களை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது. வட இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களை ஒப்பந்த ஊழியர்களாக நியமித்துவருகிறது.

இவையெல்லாம் எதேச்சையாக நடப்பவை அல்ல. என்.எல்.சி.யை தமிழரிடம் இருந்து பறிப்பதற்காகவே திட்டமிட்டு செய்யப்படுகின்றன. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தமிழகத்தின் அடையாளம். அது பாட்டாளிகளின் சொத்து. அதை அபகரிக்கவும், அடையாளத்தை அழிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை பா.ம.க. அனுமதிக்காது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவதுடன், தொழிலாளர் முதல் அதிகாரிகள் வரை அனைத்து பணிகளிலும் நிலம் தந்தவர்களின் வாரிசுகளுக்கும், மண்ணின் மைந்தர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். தலைவர் மற்றும் இயக்குனர் பதவிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story