சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் முதல்-அமைச்சர் அறிவிப்பு
நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
இதுதொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதாவின் ஆணையின்படி, சென்னையில் நடிகர் திலகம், செவாலியர் சிவாஜிகணேசனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு முடிவடையும் நிலையில் இருந்தது. இதற்கிடையே 1.10.2017 அன்று சிவாஜிகணேசன் பிறந்தநாள் வருவதால் மணிமண்டபத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் சிவாஜிகணேசனின் குடும்பத்தினரிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.
அதன் அடிப்படையில் மணிமண்டபத்தின் பணிகளை விரைந்து முடிக்குமாறும், சிவாஜி கணேசன் பிறந்தநாளான 1.10.2017 அன்றே மணிமண்டபத்தை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமாருடைய தலைமையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைக்கவும் ஆணையிட்டு இருந்தேன்.
நானே இம்மணிமண்டபத்தை திறக்கலாம் என்று ஆவலாகவும், ஆர்வத்துடனும் இருந்தேன். இருப்பினும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளின் அடிப்படையில் நான் வெளியூரில் இருப்பதால், நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளன்று மணிமண்டப திறப்பு விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அதேபோல், துணை முதல்-அமைச்சரும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட சில நிகழ்ச்சிகளின் காரணமாக இவ்விழாவில் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. நான் ஆரம்பகாலம் முதல் சிவாஜி கணேசன் பேரில் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். அவரது நடிப்பாற்றலுக்கு இணை அவரேதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
எனவே நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினரின் வேண்டுகோளின்படியும், கலைத்துறையினரின் கோரிக்கைகளின்படியும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிவாஜிகணேசனின் மணிமண்டபத்தை தமிழக அரசின் சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார்.
மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை வகிப்பார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலை வகிப்பார் என தெரிவித்துக்கொள்கிறேன். விழா ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து உடனடியாக மேற்கொள்ள ஆணையிட்டுள்ளேன்.
இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என்ற செய்தி கேட்டதும், சிவாஜி கணேசனின் இளைய மகன் நடிகர் பிரபு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.

Related Tags :
Next Story