காய்ச்சல் என தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்


காய்ச்சல் என தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Oct 2017 7:18 PM IST (Updated: 1 Oct 2017 7:18 PM IST)
t-max-icont-min-icon

காய்ச்சல் என தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

காய்ச்சல் என தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.  837 மருத்துவமனைகளில் ரூ 23.5 கோடி செலவில் ரத்தப் பரிசோதனை ஆய்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. திருச்சி அரசு மருத்துவமனையை முறையாக பராமரிக்காத 3 பணியாளர்கள் பணி நீக்கம்.  திருச்சி அரசு மருத்துவமனையில் 179 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.12 பேருக்கு டெங்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story