சசிகலா விரைவில் பரோலில் நிச்சயம் வெளிவருவார் -டிடிவி தினகரன்


சசிகலா விரைவில் பரோலில் நிச்சயம் வெளிவருவார் -டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 2 Oct 2017 12:46 PM IST (Updated: 2 Oct 2017 12:45 PM IST)
t-max-icont-min-icon

சசிகலா விரைவில் பரோலில் நிச்சயம் வெளிவருவார் என டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை

காந்திஜெயந்தியை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள  காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போதிய எம்எல்ஏ ஆதரவு இல்லாததால் ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறியிருக்கலாம், காவல்துறையை கையில் வைத்திருப்பதால் வழக்கு தொடர்கிறார்கள். சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டுள்ளோம், பரோலில் நிச்சயம் வெளிவருவார். டெங்கு காய்ச்சலை விட அமைச்சர்கள் கொடியவர்கள் . டெங்குவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டுமோ அதேபோல தற்போதைய ஆட்சியை அகற்ற வேண்டும். புதிய ஆளுநர் நடுநிலையோடு இருந்து செயலாற்ற வேண்டும்.

மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை கூறிய கருத்துக்கு, நாங்கள் யாருடனும் சேர வேண்டிய அவசியமில்லை என்று தினகரன் பதில் அளித்தார்.

Next Story