சென்னை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் நவ.20-ம் தேதி சுயாட்சி மாநாடு நடைபெறும்-வைகோ


சென்னை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் நவ.20-ம் தேதி சுயாட்சி மாநாடு நடைபெறும்-வைகோ
x
தினத்தந்தி 2 Oct 2017 3:55 PM IST (Updated: 2 Oct 2017 3:54 PM IST)
t-max-icont-min-icon

சென்னை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் நவ.20-ம் தேதி சுயாட்சி மாநாடு நடைபெறும்-என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறினார்.

சென்னை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் நவ.20-ம் தேதி சுயாட்சி மாநாடு நடைபெறும். பரூக் அப்துல்லா, பிரகாஷ்சிங் பாதல், கேரள மார்க்சிஸ்ட் தலைவர்கள், வட கிழக்கு மாநிலங்களின் தலைவர்கள் சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

எந்தெந்த வகையில் மத்திய அரசு மாநில உரிமைகளை பறிக்கிறது என்பது குறித்து மாநில சுயாட்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

மத்திய அரசு பல்வேறு கேடுகளை தமிழகத்திற்கு செய்கிறது . ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என மத்திய அரசு செயல்படுகிறது. நவோதயா பள்ளிகளை திறக்க, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க மதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல மாநிலங்களில் இந்தியை எதிர்க்க வேண்டிய நிலை தற்போது அதிகமாகி உள்ளது. 

மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தலைவர்களை அழைத்துள்ளோம். மாநில சுயாட்சிகளை ஆதரிக்கும் கட்சித் தலைவர்களை மாநாட்டுக்கு அழைக்கிறோம். பாஜக மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹாவை மாநில சுயாட்சி மாநாட்டுக்கு அழைத்துளோம். மாநில மொழிகளை ஆட்சி மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

சிவாஜி சிலை பீடத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதி பெயரை நீக்கியது தவறு. கோவையில் காமராஜரால் தொடங்கப்பட்ட அச்சகத்தை விற்பனை செய்வதை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story