‘‘தமிழக மக்கள் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்’’ சீமான் பேட்டி
‘‘தமிழக மக்கள் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்’’ சீமான் பேட்டி
பெரம்பூர்,
பெரம்பூர் பெரவள்ளூர் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது சிலையின் அருகே வைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறியதாவது:–
டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கின்றனர். ஆனால் ‘தூய்மை இந்தியா’ என பா.ஜ.க.வினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எச்.ராஜாவின் மணி விழாவுக்கு செல்வதற்கு நேரம் இருந்த தமிழக முதல்வருக்கு, சிவாஜியின் மணிமண்டபம் திறக்க நேரமில்லை.
ஒருவேளை தான் சிவாஜி சிலையை திறந்து சிவாஜி பெயரை களங்கப்படுத்த விரும்பவில்லை என அவர் நினைத்து தவிர்த்திருக்கலாம். தமிழக மக்கள் சினிமாவை பார்த்து ரசிப்பார்கள், ஆனால் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story