ம.தி.மு.க. சார்பில் மாநில சுயாட்சி மாநாடு அடுத்த மாதம் 20-ந் தேதி நடக்கிறது
சென்னையில் ம.தி.மு.க. சார்பில் மாநில சுயாட்சி மாநாடு அடுத்த மாதம் 20-ந் தேதி நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
ம.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் ஆகியவை சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வைகோ முன்னிலை வகித்து உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் திராவிட இயக்கத்தின் 101-வது ஆண்டு தொடக்க நாளான அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந் தேதி ம.தி.மு.க. சார்பில், சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் மாநில கட்சிகளின் தலைவர்களை அழைப்பது என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்குவதற்கு இம்மாநாட்டின் மூலம் செயல் திட்டங்களை வகுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டும், இந்த படுகொலைக்கு காரணமான சிங்கள இனவாத அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கவும், ஈழத்தமிழர்களுக்கு விடியல் கிடைக்க தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு உரையாற்றிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது சிங்கள அரசின் முன்னாள் ராணுவத்தினர் சிலர் தாக்குதல் நடத்த முயன்றனர். இதற்கு இலங்கை அரசிடம் எதிர்ப்பு தெரிவிக்காத இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சிங்கள அரசின் இச்செயலை கண்டித்த தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்பு வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என பா.ஜ.க. வின் செயல்பாடு அமைந்திருக்கும் சூழலில், நாங்கள் நடத்த உள்ள மாநில சுயாட்சி மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்த மாநாட்டிற்கு தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, அகாலி தளம் கட்சி தலைவர் பிரகாஷ்சிங் பாதல், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வையும் அழைக்க உள்ளோம்.
பா.ஜ.க.வை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா, மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாநில உரிமைகளுக்காக போராடும் தலைவர்களும் பங்கேற்கின்றனர். சிவாஜி மணிமண்டபத்தில் நிறுவப்பட்ட சிவாஜி கணேசன் சிலை பீடத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெயரை நீக்கியது மிகப்பெரிய தவறு. அநீதியான செயல்.
சிவாஜிகணேசன் சிலை பீடத்தில் உள்ள கல்வெட்டில், சிலை கருணாநிதியால் நிறுவப்பட்டது என்று எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story