ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஷ்ணு திடீர் மாற்றம்: 11 புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சப்-கலெக்டராக நியமனம்


ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஷ்ணு திடீர் மாற்றம்: 11 புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சப்-கலெக்டராக நியமனம்
x
தினத்தந்தி 3 Oct 2017 4:45 AM IST (Updated: 3 Oct 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 11 புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சப்-கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் 11 புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சப்-கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் செயல் இயக்குனர் வி.விஷ்ணு, மத்திய கப்பல் துறைக்கு மாற்றப்படுகிறார். தூத்துக்குடி வி.ஓ.சிதம்பரனார் துறைமுகத்தில் இனயம் துறைமுக திட்ட சிறப்புப் பணி அதிகாரியாக அவர் பணியாற்றுவார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப்-கலெக்டர் டி.பிரபுசங்கர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் செயல் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

தூத்துக்குடி சப்-கலெக்டர் தீபக் ஜேக்கப், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்படுகிறார். வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் கே.மணிவண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில ஆர்ஜிதம்) நியமிக்கப்படுகிறார்.

ஐ.ஏ.எஸ். பயிற்சிக்குப் பின்னர் மத்திய அரசுப் பணியில் நியமிக்கப்பட்டிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 11 பேர் தமிழக அரசுப் பணியில் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், மத்திய விளையாட்டுத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் டி.சாருஸ்ரீ, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சப்-கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

மத்திய நீர்வளத் துறை, நீர்வளம் மற்றும் ஆறு மேம்பாடு, கங்கை மறுசீரமைப்பு அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப்-கலெக்டராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.

மத்திய மருந்தாக்கியல் துறை, ரசாயனம், உரங்கள் அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் எஸ்.அருண்ராஜ், திண்டுக்கல் மாவட்டம் பழனி சப்-கலெக்டராக மாற்றப்படுகிறார்.

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை, ஊடக மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் எம்.எஸ்.பிரசாந்த், தூத்துக்குடி சப்-கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

மத்திய கால்நடை, பால்வளம், மீன்வளத் துறை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் ராஜகோபால் சுங்காரா, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சப்-கலெக்டராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.

மத்திய தபால் துறை, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் கிராந்தி குமார் பதி, நாமக்கல் சப்-கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

மத்திய மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் பி.பிரியங்கா, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சப்-கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

மத்திய உணவு மற்றும் பொதுவினியோகத் துறை, நுகர்வோர் நலன் அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் பி.விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சப்-கலெக்டராக மாற்றப்படுகிறார்.

மத்திய செலவீனங்கள் துறை, நிதி அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் கே.எம்.சரயூ, புதுக்கோட்டை சப்-கலெக்டராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.

மத்திய நிதிச்சேவைத் துறை, நிதி அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் ஏ.கே.கமல் கிஷோர், திருச்சி சப்-கலெக்டராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.

மத்திய வணிகத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் ஆஷா அஜித், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சப்-கலெக்டராக மாற்றப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story