பல ஆயிரம் கோடி பழைய ரூபாய் தாள் மாற்றம் குறித்து வருவாய் புலனாய்வு விசாரணை டாக்டர் ராமதாஸ் வற்புறுத்தல்
பழைய ரூபாய் தாள் மாற்றம் குறித்து வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னை,
டாஸ்மாக், மின்வாரியம், அரசு போக்குவரத்து கழகங்களில் பல ஆயிரம் கோடிக்கு பழைய ரூபாய் தாள் மாற்றம் குறித்து வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிந்தைய காலத்தில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.800 கோடி பழைய ரூபாய் தாள்களை வங்கியில் செலுத்தியது பற்றி விளக்கம் அளிக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருமான வரித்துறை ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் ஆட்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய அளவிலான கருப்பு பணப் பரிமாற்றம் அம்பலமாகவிருக்கிறது. அந்த வகையில் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
உண்மையில், மதுக்கடைகளில் பழைய ரூபாய் தாள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தான் வாய்மொழியாக ஆணையிட்டிருந்தனர். ஆனாலும் கூட மது வாங்க வந்தவர்களிடம் இருந்து அதிக எண்ணிக்கையில் பழைய ரூபாய் தாள்கள் வாங்கப்படவில்லை.
மாறாக அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பினாமிகள் மூலமாகத் தான் ஒவ்வொரு மதுக்கடையிலும் தினமும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பழைய ரூபாய் தாள்கள் கட்டாயமாக மாற்றப்பட்டன. இந்த வழியில் தான் அமைச்சர்களின் ரூ.800 கோடி கருப்புப் பணம் மிகத் தந்திரமாக வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டது.
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு மாநில அமைச்சர்களே காரணமாக இருப்பதை அனுமதிக்கக்கூடாது. எனவே, டாஸ்மாக், மின்வாரியம், அரசு போக்குவரத்து கழகங்கள் ஆகியவற்றின் கணக்கில் பண மதிப்பிழப்பு காலத்தில் பல ஆயிரம் கோடி பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்பட்டது குறித்து வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story