ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை


ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை
x
தினத்தந்தி 4 Oct 2017 11:29 AM IST (Updated: 4 Oct 2017 11:29 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டார். தினத்தந்திக்கு ஏற்கனவே அளித்த பேட்டியில், ரஜினிகாந்துக்கு போட்டியாக நான் அரசியலுக்கு வரவில்லை. புதிய கட்சி பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணிகளை தொடங்கிவிட்டேன்
 என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா? என்ற கேள்விக்கு அதுதான் நியாயமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது என பதிலளித்து இருந்தார். அரசியல் குறித்து பேசிவரும் நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற  நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். 

அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story