18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வருகிற 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். அவர்கள் 19 பேரும் கடந்த மாதம் 22-ந் தேதி கவர்னரை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
ஆனால், இது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு எதிராக உள்ளது என்று 19 பேருக்கும் எதிராக சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து ஜக்கையன் விலகினார்.
கடந்த செப்டம்பர் 14-ந் தேதியன்று 18 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராக வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.
இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அவர்கள் 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இது தொடர்புடைய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகி அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
அவரது வாதம் காலை 11.35 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நீடித்தது. அதன்பின் பிற்பகல் 2.20 மணி முதல் 3.35 மணி வரையும் அவர் வாதிட்டார்.
இந்நிலையில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வருகிற 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய தினம் யாரும் அவகாசம் கேட்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையானது தொடர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story