டெங்கு காய்ச்சலை ஒழிக்க ஒதுக்கப்படும் பணம் எங்கே செல்கிறது? மு.க.ஸ்டாலின் கேள்வி
டெங்கு காய்ச்சலை ஒழிக்க ஒதுக்கப்படும் பணம் எங்கே செல்கிறது? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்:- ஏற்கனவே உயர்நீதிமன்றமே, பள்ளி, கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி இந்த விழாவிற்கு அழைத்துச் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. அதையும் மீறி பள்ளி மாணவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் இந்த அரசு அழைத்துச் செல்கிறது. அரசு விழா என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவும், அவர்களின் கட்சிப் பிரச்சினைகளை பேசவும், லம்பாடி அரசியலை பேசவும் அந்த விழாக்களை பயன்படுத்துகிறார்கள்.
அந்த விழாவிற்கு 100 நாள் வேலை செய்யும் தாய்மார்களை கட்டாயப்படுத்தி அவர்களுக்கு முழுநாள் விடுமுறை அளித்து ஒவ்வொரு ஊராட்சியிலும் அவர்களை வேன் வைத்து அழைத்துச் செல்லும் காட்சியெல்லாம் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அதையெல்லாம் ஊடகங்கள் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.
அதுமட்டுல்லாமல் நான் கேள்விபட்டது, இன்றைக்கு கரூரில் எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை விட சொல்லியிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளின் வாகனங்களையும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த அரசு விழாவை நடத்த அழைப்பது யாரென்று கேட்டால், தலைமைச் செயலாளர். இன்றைக்கு அவர் பதில் சொல்ல இயலவில்லை என்றாலும், நாளைக்கு எந்த இடத்தில் இருந்தாலும் இதற்கு பதில் சொல்லி விளக்கமளித்தாக வேண்டும். அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்லக்கூட தயாராக இருக்கின்றோம்.
கேள்வி:- அரசு சார்பில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க ரூ.16 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால், தினமும் மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டே இருக்கிறார்களே?. இந்த விஷயத்தில் அரசு சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா?.
பதில்:- பணம் ஒதுக்குகிறார்கள், ஆனால் இந்தப் பணம் எங்கே போகிறது. ஏற்கனவே குட்கா விற்பதற்கே மாமூல் வாங்கியவர்கள், இப்போது டெங்கு பரவுவதற்கு மாமூல் வாங்குகிறார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் இருக்கின்றது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Tags :
Next Story