தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நாளை பதவி ஏற்பு
தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நாளை(வெள்ளிக்கிழமை) பதவி ஏற்கிறார்.
சென்னை,
தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நாளை(வெள்ளிக்கிழமை) பதவி ஏற்கிறார். கிண்டி ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழக கவர்னராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து மராட்டிய மாநில கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.
அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி தமிழக பொறுப்பு கவர்னர் என்ற கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இதற்கிடையே ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், சட்டமன்றத்தில் மெஜாரிட்டி நிரூபித்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்துக்கு முழு நேர கவர்னரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இதைத்தொடர்ந்து அசாம் மாநில கவர்னராக பணி யாற்றிய பன்வாரிலால் புரோகித்தை தமிழகத்தின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த 30-ந்தேதி உத்தரவிட்டார்.
அதன்படி, தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நாளை (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்றுக் கொள்கிறார்.
இதற்காக அவர் அசாம் மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் இன்று(வியாழக் கிழமை) மதியம் 1.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அவரை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரபுப்படி பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து வரவேற்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோரும் வரவேற்கிறார்கள். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, சட்டசபை சபாநாயகர் ப.தனபால் மற்றும் அமைச்சர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். பிற்பகல் 1.30 மணிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் 1.33 மணி அளவில் பன்வாரிலால் புரோகித் கிண்டி ராஜ்பவன் புறப்பட்டு செல்கிறார்.
சென்னை கிண்டி ராஜ்பவன் கவர்னர் மாளிகையில் நாளை காலை 9.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது. இவ்விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு பன்வாரிலால் புரோகித்துக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழகத்தின் புதிய கவர்னராக பதவி ஏற்க உள்ள பன்வாரிலால் புரோகித் மராட்டிய மாநிலம் விதர்பா பகுதியை சேர்ந்தவர். அவருக்கு 77 வயது ஆகிறது. எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். தற்போது ‘தி ஹிதாவதா’ என்ற நாளிதழின் உரிமையாளர்-நிர்வாக ஆசிரியராகவும், நாக்பூரில் பொறியியல் கல்லூரி ஒன்றின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்தபோது தமிழக கவர்னராக லெப்டினெட் ஜெனரல் சர் ஆர்சிப்பால் எட்வர்ட் நை இருந்தார். அதன் பின்னர் கவர்னர், பொறுப்பு கவர்னர் என்று 28 பேர் தமிழக கவர்னர்களாக இருந்துள்ளனர். தற்போது தமிழகத்தின் 29-வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு புதிய கவர்னர் பதவி ஏற்க உள்ளதையடுத்து, பொறுப்பு கவர்னராக இருந்த மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று காலை 9 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார். அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழியனுப்பி வைக்கிறார்.
முன்னதாக நேற்று மாலை வித்யாசாகர் ராவ் கிண்டி ராஜ்பவனில், முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, துணை செயலாளர்கள் கே.வி.முரளிதரன், எம்.மோகன், செய்தித்துறை கூடுதல் இயக்குனர் ஹேமநாதன், மெய்காப்பாளர்கள் பிரவீன்குமார், ஷோம் வான் ஷி உள்பட அதிகாரிகள், அலுவலர்களுடன் கலந்துரையாடி பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.

Related Tags :
Next Story